search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கோவில் கட்டும் பணிக்கு உதவிய அழகி
    X

    கோவில் கட்டும் பணிக்கு உதவிய அழகி

    • இந்த 4 ஆண்டு காலமும் ஒரு கிழவி அங்கு வேலை செய்த பணியாளர்களுக்கு நீர், மோர் கொடுத்தாள்.
    • சிற்பிகள் உளியால் கையில் அடிபட்டு கொண்டால் கட்டு போட்டு முதல் உதவி செய்வாள்.

    தஞ்சை பெரிய கோவில் கட்டும் பணி 4 ஆண்டு காலம் நடந்தது.

    இந்த 4 ஆண்டு காலமும் ஒரு கிழவி அங்கு வேலை செய்த பணியாளர்களுக்கு நீர், மோர் கொடுத்தாள்.

    சிற்பிகள் உளியால் கையில் அடிபட்டு கொண்டால் கட்டு போட்டு முதல் உதவி செய்வாள்.

    "இன்றைக்கு வேலை எவ்வளவு தூரம் வந்திருக்கிறது" என்று கேட்டு இன்புறுவாள்.

    அவள் பெயர் அழகம்மை. அவள் கணவன் அவளை "அழகி" என்று கூப்பிட்டு வந்தான்.

    கணவனுக்கு பின்னும் சகவயதுடையவர்கள்.

    ஊர் பெரியவர்கள் அழகி என்றே கூப்பிட்டு வந்ததால் சிறு குழந்தைகள் கூட "அழகிப்பாட்டி" என்றே அழைத்தனர்.

    அதனால் சிற்பக் கலைஞர்களுக்கும் பணியாளர்களுக்கும் கூட அவள் "அழகிப்பாட்டி"யாகவே திகழ்ந்தாள்.

    கல்லை நல்ல படியாய் யாருக்கும் சேதமில்லாமல் ஏற்ற வேண்டுமே என்று மன்னரைப் போலவே அழகிப்பாட்டியும் நெடு நாட்களாய் கவலைப்பட்டாள்.,

    ஏற்றியாற்று என்று தலைமைச் சிற்பி சொன்னதும் அவள் அடைந்த ஆனந்தம் கொஞ்ச நஞ்சமல்ல சுண்டல் செய்து நிவேதனம் செய்தாள்.

    இதைத் தலைமைச் சிற்பி பார்த்தான்.

    தலைமையாற்று இந்தத் தள்ளாத வயதிலும் மற்றவருக்கு உபகாரம் செய்யும் கிழவியின் நினைவாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

    கல்லில் ஒரு அழகிய தாமரை மலரைச் செதுக்கினான்.

    கிழவியிடம் காண்பித்து விட்டு விமானத்தில் பொருத்தி விட்டான்.

    அழகிப் பாட்டிக்கு பெரும் மகிழ்ச்சி, சிற்பியை வாயார வாழ்த்தினாள்.

    கும்பாபிஷேகத்துக்கு இரண்டு நாள் முன்பு "விடங்கரே! நான் அமைத்த ஆலய நிழலில் சுகமாய் இருக்கிறாரா?" என்று மனத்தால் குசலம் விசாரித்துக் கொண்டு வந்தான் ராஜராஜன்.

    அன்றிரவு ராஜராஜன் கனவில் சிவபெருமான் தோன்றி, "அன்பா! மாலையில் நீ கேட்ட வினாவுக்கு இப்போது விடை தருகிறேன்.

    அழகி அமைத்துக் கொடுத்த தாமரை நிழலில் ஆனந்தமாக வீற்றிருக்கிறேன்" என்றார்.

    ராஜராஜன் திடுக்கிட்டுக் கண் விழித்தான்.

    உடல் தொப்பலாய் வியர்த்திருந்தது. "நான் ராஜாக்களுக்கு ராஜாவாக இருக்கலாம்! ஒரு கணம் அதை மறந்து கர்வப்பட்டேனே" என்று வேதனைப்பட்டான்.

    மறுநாள் காலை வேலை நடக்குமிடம் சென்றான்.

    அழகி யார் என்று விசாரித்துக் கொண்டு அவள் இருப்பிடம் சென்றான். அவளின் சேவையைக் கேட்டு இன்புற்றான்.

    "அம்மையே! இக்கோவிலில் தாமரையால் நீ செய்த பணி என்ன?" என்று அன்புடன் கேட்டான். கிழவி தலைமைச் சிற்பிதன் வீட்டு முன் கிடந்த கல்லில் தாமரைமலர் போல் செய்து விமானத்தில் பொருத்தியதைச் சொன்னாள்.

    பரிசுகளும், மானியமும் கொடுத்து அவளை வணங்கினான்.

    மன்னன் ராஜராஜனின் பணிவைக் கண்டு அழகி பாட்டியும் உருகி மனமார வாழ்த்தினாள்.

    "தாயே! திருவிழாவில் உமையொரு பாகனுக்கு கற்குடை பிடிக்கும் புண்ணியத்தை உன் வாரிசுகளுக்குத் தருகிறேன்" என்று வாக்களித்தான்.

    அது இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள குளத்திற்கு அழகிக் குளம் என்று பெயர் சூட்டினான் மன்னன்.

    ராஜராஜனின் பெருந்தன்மைக்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

    தஞ்சை நகராட்சி அலுவலகம் தற்போதும் அழகிக் கிழவியின் வீட்டில் தான் நடைபெறுகிறது.

    Next Story
    ×