search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    குழந்தைகளுக்கு பைரவர் காசு
    X

    குழந்தைகளுக்கு பைரவர் காசு

    • கேரள தேசத்தில் லிங்காயத்துகள் போலவே தமிழகத்தில் பைரவ உபாசகர்கள், பக்தர்கள் திரளாக இருக்கின்றனர்.
    • இவர்களில் பொற்கொல்வர்களும், நகை வியாபாரம் செய்பவர்களுமே அதிகம் உள்ளனர்.

    ஆறுமாதத்தில் தொடங்கி ஐந்து வயது முடியும்வரை குழந்தைகளின் இடுப்பில் அரைஞான் கயிறு அணிவிக்கப்படுகிற போது, தாயத்து மணியுடன் சேர்த்து நாய்க்காசு என்று ஒரு பொன் காசைச் சேர்த்து அணிவிப்பது வழக்கமாக இருந்தது.

    குழந்தை வழிதவறிச் சென்று விட்டால் இக்காசுகளில் வாசம் செய்கிற தெய்வம் துணை இருக்கும் என நம்பிக்கை.

    வெள்ளி, தங்கத்தால் செய்யப்பட்ட இக்காசுகளில் அழகான நாய் உருவம் இடம் பெறுவதைக் காணும் போது வேட்டை செய்யும் சமுதாயமாக ஆதி மனிதன் வாழ்ந்த காலத்திலிருந்தே நாய் உருவ பைரவர் வாழ்க்கையைப் பாதுகாத்து வரும் கடவுள் என்று அறிகிறோம்.

    மன்னர்கள் தங்களது அரசாங்க முத்திரைகளில் நாய் உருவம் பதித்தது போன்றே பைரவரின் பக்தர்கள் வழிபாட்டுக்குக் கொடி, டாலர்களில் நாய் உருவத்தைப் பதித்து வழிபட்டு வந்தனர்.

    பைரவ மூர்த்தி வகைகளில் யோக பைரவரை பூஜித்துப் பலன் அடைந்தவர்களின் கால வரலாற்றை அறிந்தால் பைரவர் பயம் போக்கி பாதுகாப்பு தந்து பணபலமும், மனபலமும் சேர்ப்பவர் என்று அறிவீர்கள்.

    கேரள தேசத்தில் லிங்காயத்துகள் போலவே தமிழகத்தில் பைரவ உபாசகர்கள், பக்தர்கள் திரளாக இருக்கின்றனர்.

    இவர்களில் பொற்கொல்வர்களும், நகை வியாபாரம் செய்பவர்களுமே அதிகம் உள்ளனர்.

    பொதுவாக நகைக்கடை வைத்திருப்பவர்கள் யோக பைரவரை வழிபடுவதால் மக்களின் போக்குவரத்தும், வாடிக்கையாளர் ஈர்ப்பும், நகைகள் சேர்ந்து வியாபார குவிதலும் ஏற்படும்.

    Next Story
    ×