search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்
    X

    நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்

    • ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் 7 ஜென்மங்களுக்கும் தொடரும்.
    • கடுமையான தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

    ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தி கொண்டாடப்படுகின்றது.

    பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரம் பலிப்பது குறைவு.

    ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் 7 ஜென்மங்களுக்கும் தொடரும். கடுமையான தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

    நாக தோஷம் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து திருமணத் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

    சில கணவன் - மனைவி பிரிந்து வாழ்வார்கள் அல்லது குழந்தை பாக்கியம் இருக்காது அல்லது உடல் ஊனமான குழந்தை பிறக்கும்.ஒரு சிலருக்கு தீராத நோய், பரம்பரை வியாதி , குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது போன்ற பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர்.

    நாகசதுர்த்தி விரதம் கணவர், குழந்தைகள் நலனுக்காகவும் பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.

    கடுமையான நாக தோஷம் உள்ளவர்கள் அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகங்களை சிலையாகச் செதுக்கி பிரதிஷ்டை அபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும்.

    மற்றவர்கள் அரசமரத்தடியில் உள்ள சர்ப்ப சிலைக்கு நாக சிலைகளுக்கு பால், தண்ணீர் அபிஷேகம் செய்யவேண்டும். பால் ஊற்றி விட்டு தண்ணீர் ஊற்றி சிலையை சுத்தம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு நாகர் சிலை மீது மஞ்சளை தலை முதல் வால்முடிய தடவி, சந்தனம், குங்குமத்தினால் அலங்கரித்து, பூமாலைகளை அணிவித்து பஞ்சினால் செய்த கோடிதந்தியம், வஸ்திரம் அணிவித்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் புஷ்பங்களினால் அலங்கரித்து, பூ அட்சதையுடன் சர்க்கரை பொங்கல், துள்ளு மாவு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, படைக்க வேண்டும்.

    கற்பூரஆரத்தி காட்டி பூஜை செய்தால் குடும்பத்தில் நிம்மதி பெருகும்.

    அத்துடன் கணவர் மற்றும் குழந்தைகளின் நலன் மேம்படும்.

    தொழில் வளர்ச்சி, நல்ல வேலை வாய்ப்பு சிறப்பாக இருக்கும். கடன் தொல்லை குறையும். ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். விபத்து கண்டம் நீங்கும்.

    நாக தோஷத்தால் தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும்.

    Next Story
    ×