search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ராஜ ராஜனும் பெருந்தச்சனும்
    X

    ராஜ ராஜனும் பெருந்தச்சனும்

    • பெரிய கோவில் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ராஜராஜ சோழன்தான்!...
    • ஆனால் எத்தனை பேருக்கு ராஜராஜ பெருந்தச்சனின் பெயர் நினைவுக்கு வரும்?

    வரலாற்று பின்னணியில் நடந்திருக்கும் ஒரு நிகழ்ச்சி இது.

    பெரிய கோவில் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ராஜராஜ சோழன்தான்!...

    ஆனால் எத்தனை பேருக்கு ராஜராஜ பெருந்தச்சனின் பெயர் நினைவுக்கு வரும்?... இதோ அந்த சோக வரலாறு...

    தஞ்சை பெரிய கோவிலையும், மிகப்பெரிய தேர் ஒன்றினையும் நிர்மானிக்கும் பொறுப்பினை விஸ்வகர்மா வகுப்பைச் சேர்ந்த பெருந்தச்சன் என்பவனிடம் ஒப்படைத்திருந்தான் சோழ மன்னன் ராஜராஜன்.

    ஆலயப்பணியை முடித்த பெருந்தச்சன் தேர் செய்யும் பணியையும் முடித்தார்.

    அடுத்து?... செய்யப்பட்டிருக்கும் அந்த தேரை மறுநாள் வீதியில் செலுத்தி வெள்ளோட்டம் பார்க்க வேண்டும்.

    மன்னன் தேரில் அமர்ந்து அதை பார்வையிட வேண்டும்.

    எல்லாம் முடிந்து விட்டதா? வெள்ளோட்டப்பணியைத் துவக்கலாமா? என்று கேட்ட மன்னனிடம்,

    மன்னா ஒரு விஷயம், கோவில் பணி, தேர்ப்பணி இரண்டும் முடிவடைந்து விட்டது.

    தேர் வெள்ளோட்டம் இப்போது நடத்தக்கூடாது.

    அப்படி நடந்தால் அது உங்கள் உயிருக்குத்தான் ஆபத்து. வேண்டாம் என்று தடுத்தான் பெருந்தச்சன்.

    மன்னன் யோசனை செய்தான். என் ஆயுளுக்கு ஆபத்தா?

    அதனைத்தவிர்க்க நான் என்ன செய்யவேண்டுமென்று மன்னன் பெருந்தச்சனை கேட்க,

    அதற்கு அவர் நாளைக்கு ஒரு நாள் மட்டும் நான் மன்னனாக பதவி ஏற்க வேண்டும்.

    ஒரு நாளைக்கு மட்டும் உங்கள் மகுடத்தை துறக்க நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்றார்.

    இந்த வார்த்தைகளைச் கேட்ட ராஜராஜன் அதற்கு சம்மதித்தான்.

    பெருந்தச்சனுக்கு அன்று ஒருநாள் மட்டும் முடிசூட்டி அவனை மன்னன் ஆக்கினான்.

    மறுநாள் தேர் வெள்ளோட்டத்தின் போது.. தேரில் பவனி வந்தான் ராஜராஜ பெருந்தச்சன்! அன்றே!... நிலை தடுமாறி கீழே விழுந்த பெருந்தச்சன் தேர்ச்சக்கரங்களில் சிக்கி உயிரை இழந்தான்.

    ராஜராஜனது உயிரைக்காக்க, தன் உயிரை பலிகொடுத்த பெருந்தச்சன் இறக்கும் தருவாயில் சோழ மன்னனிடம் ஒரு வரத்தைப்பெற்றுக் கொண்டு உயிரை விட்டான்.

    பெரிய கோவிலில் எந்த பூஜை, திருவிழாக்கள் நடந்தாலும் முதலில் தனக்குப்பூஜை செய்து தன்னை வழிபட்ட பின்னர் தான் மற்ற பூஜைகளை செய்ய வேண்டும் என்பதுதான் பெருந்தச்சனின் கோரிக்கை.

    ராஜராஜசோழனும், அவனது பரம்பரையும் இதனை கருத்தில் முன்னிறுத்தி அதன் படியே செய்து வந்தனர்.

    அக்காலத்தில் ஆலயத்தில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் சரி, முதலில் பெருந்தச்சனுக்குப்பூஜை செய்து விட்டுதான் மற்றவை நடந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

    Next Story
    ×