search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சைவ வைணவ வழிபாடுகளில் பங்குனி உத்திரம்
    X

    சைவ வைணவ வழிபாடுகளில் பங்குனி உத்திரம்

    • சைவ வழிபாடுகளிலும் ,வைணவ வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .
    • பெருமாளுக்கும் , தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில் தான்.

    பழனியில் காவடி உற்சவம் , மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம் ,சுவாமி மலையிலும் ,திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம்,

    திருப்பரங்குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம் , மதுரையில் மீனாட்சி திருமணம்

    என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

    சைவ வழிபாடுகளிலும் ,வைணவ வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .

    இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை .

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனிஉத்திர திருவிழாதான்.

    பெருமாளுக்கும் , தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில் தான்.

    எனவே , பெருமாளும் , தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர் .

    இது ஆலய 5-வது திருச்சுற்றில் , பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

    பங்குனி உத்திரப் பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால் ,திருமணப் பேறு உண்டாகும் , பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம் .

    இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .

    Next Story
    ×