என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
சுதர்சன காயத்ரி மந்திரம்
- சுதர்சனருக்கு எட்டு முதல் 32 கரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
- திருமாலின் அருளை பெறலாம். ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும்.
திருமால் தனது கையில் வைத்திருக்கும் சக்கரமே 'சுதர்சன சக்கரம்' என்று அழைக்கப்படுகிறது.
திருமால் தனது கையில் வைத்திருக்கும் சக்கரமே 'சுதர்சன சக்கரம்' என்று அழைக்கப்படுகிறது.
சுதர்சனரை சக்கரத்தாழ்வார் என்றும் போற்றுவார்கள்.
இவர் திருமாலின் தசாவதாரங்களில் வராக அவதாரம் மற்றும் நரசிம்ம அவதாரங்களின் குணங்களை ஒருங்கே பெற்றவர்.
பக்தர்களுக்கு ஞானத்தைத் தந்து பயத்தை அழிக்கும் தன்மை கொண்டவர்.
சுதர்சனருக்கு எட்டு முதல் 32 கரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தீமை செய்பவர்களை அழிப்பது இவரது பணிகளில் ஒன்று.
இந்திரத்துய்மன் என்பவன் யானையாக பிறந்த போது, கூடு என்பவன் முதலையாகப் பிறந்தான்.
இறை பூஜைக்காக பூப்பறிக்கச் சென்ற யானையின் காலை, குளத்தில் இருந்த முதலை கவ்விக்கொண்டது.
அப்போது திருமால், சுதர்சனரை அனுப்பியே முதலையைக் கொன்றார் என்பது புராண வரலாறு. கிருஷ்ண பகவானை பழித்து பேசிய சிசுபாலனைக் கொன்றதும், துர்வாச முனிவரை விரட்டி அவரது கர்வத்தை அகற்றியதும் சுதர்சனர்தான்.
இவரை ஆலயங்களில் வழிபடுவதுடன், வீட்டில் எந்திர வடிவில் வைத்தும் வழிபாடு செய்யலாம். பூஜை செய்யும் பொழுது, அபிஷேகம் அர்ச்சனை, சுதர்சன அஷ்டகம் முதலியவற்றைச் சொல்லி கற்பூர தீபம் காட்டும் பொழுது சுதர்சனருக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது உத்தமம்.
இந்த மந்திரத்தை தினமும் 108 தடவைச் சொல்லி வருவது பல்வேறு நன்மைகளை வழங்கும்.
சுதர்சன காயத்ரி மந்திரம்
'ஓம் சுதர்ஹநாய வித்மஹே
மஹாஸ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்'
திருமாலின் கரங்களை அலங்கரிக்கும் சுதர்சனரை அறிந்து கொள்வோம்.
மகா ஜூவாலையாகத் திகழும் சுதர்சனர் மீது தியானம் செய்வோம்.
தீமையை அழிக்கும் அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.
இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, சுதர்சன பெருமாளை வழிபாடு செய்து வந்தால் பயம் நீங்கி ஞானம் பிறக்கும்.
கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். திருமாலின் அருளையும் பெறலாம்.
ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும்.