search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சுதர்சனர் மகிமை
    X

    சுதர்சனர் மகிமை

    • குடந்தையில் கோவில் கொண்டுள்ள சக்ரபாணி சுதர்சனரின் வடிவமே.
    • காஞ்சியில் அஷ்டபுஜர் எண் கரங்கள் கொண்ட பெருமாள் திருமாலின் சக்கர சக்தி எனப்படுகிறார்.

    நாகலாபுரம் வேதநாராயண பெருமாள் ஆலயத்தில் மச்ச அவதாரத்தில் இருக்கும் பெருமாளின் கையில் இருந்து சக்கரத்தாழ்வார் புறப்படும் நிலையில் உள்ளார்.

    எனவே இந்த தலம் சுதர்சனர் மகிமை நிறைந்த தலமாகவும் கருதப்படுகிறது.

    மகாவிஷ்ணுவின் திருக்கரங்கள் ஒன்றில் காணப்படும் சங்கர ஆயுதத்தில் உறையும் தேவனே சுதர்சனர் எனப்படுகிறார். அந்தச் சக்கரம்தான் சுதர்சன சக்கரம் எனப்படுகிறது.

    திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கரத்திற்கு உரிய தெய்வம் என்பதால் சுதர்சனர் உக்கிர வடிவினர். இவர் சக்கரத்தாழ்வார் என்றும் வணங்கப்படுகிறார்.

    கும்பகோணமும் காஞ்சீபுரமும் திருமாலின் சக்கர அம்சத்துக்கு சிறப்பாக உரிய தலங்கள்.

    காஞ்சியில் அஷ்டபுஜர் எண் கரங்கள் கொண்ட பெருமாள் திருமாலின் சக்கர சக்தி எனப்படுகிறார்.

    இவருக்குச் சக்கரராயர் என்றும் ஒரு பெயர் வழங்குகிறது.

    குடந்தையில் கோவில் கொண்டுள்ள சக்ரபாணி சுதர்சனரின் வடிவமே.

    சுதர்சன வழிபாட்டின் முக்கிய நோக்கம், பரம்பொருளை சக்கர யந்திர வடிவிலே அமர்த்தி வழிபடுவதே ஆகும்.

    ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகர் காலத்தில் சுதர்சன வழிபாடு பிரபலமடைந்தது.

    அவர் இயற்றிய ஸ்ரீ சுதர்சனாஷ்டகம் இணையற்ற படைப்பாகும்.

    காஞ்சி, கண்டியூர், தாடிக் கொம்பு, திருமோகூர், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீரங்கம், திருமயம் ஆகிய தலங்களில் சிறப்பான சுதர்சன வடிவங்கள் உள்ளன.

    ஸ்ரீ சுதர்சனர் பிரார்த்தனை தெய்வமாக விளங்குகிறார்.

    முக்கோணம், ஷட்கோணம் ஆகியவற்றுக்குள் சுதர்சனரை அமர்த்தி வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    பேராபத்துக்களிலும், தீரா நோயில் வாடும்போதும், எடுத்த காரியங்களில் இடையூறு ஏற்படும்போதும் நாகலாபுரம் வந்து ஸ்ரீ சுதர்சன மூல மந்திரம், வழிபாடு பூஜை ஆகியவை செய்து அநேகர் பலன் அடைகின்றனர்.

    Next Story
    ×