search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருமூலரின் திருமந்திரந்திரத்தில் சில துளிகள்!
    X

    திருமூலரின் திருமந்திரந்திரத்தில் சில துளிகள்!

    • சைவ சித்தாந்தம் வரித்துக் கொண்ட சித்தர் நூல் என்றும் அதைக் குறிப்பிடலாம்.
    • இவை ‘திருமந்திரம்‘ என்னும் தீந்தமிழ்க் கடலின் ஒரு சில தேன்துளிகள்!

    திருமூலரின் 'திருமந்திரம்' சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் என்னும் மூன்று பாயிரங்களையும் ஒன்பது தந்திரங்களையும் கொண்டுள்ளது.

    பாடல்களின் தொகை மூவாயிரம் என சேக்கிழார் குறித்துள்ளார்.

    எனினும் இராமலிங்க வள்ளலார் குருமந்திரப் பாடல் தொகை எட்டாயிரம் எனக் குறிப்பிடுகிறார்.

    வேறு சில சித்தர் நூல்களிலும் இத்தொகைக் குறிப்பே காணப்படுகிறது.

    தனித்துவமான கருத்துகளை, உட்பொருளைக் கொண்ட திருமந்திரத்தை சைவ சித்தாந்தத்தின் மூலம் எனச் சொல்லலாம்.

    சைவ சித்தாந்தம் வரித்துக் கொண்ட சித்தர் நூல் என்றும் அதைக் குறிப்பிடலாம்.

    மந்திரங்கள், சமா திக்கிரியைப் போன்ற நுட்பமான கருத்துகள் மட்டுமன்றி தமிழிலக்கியத்துக்குப் பெருமை சேர்ப்பவையாக புகழ்பெற்றுள்ளன, சமூகக் கருத்துகள் கொண்ட பல திருமந்திரப் பாடல்கள்

    'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' (நான் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெறட்டும்)

    'யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே' (பிறர் மனம் புண்படாத இன்சொற்களைப் பேசுங்கள்)

    'அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே' (பேரன்பு காட்டும் ஜீவாத்மாக்கள் சிவனுடன் ஒன்றி விடுகின்றனர்.)

    'உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்' (மனித உடம்பு ஓர் ஆலயம். அதனுள்ளே இறைவன் உறையும் கருவறையே மனித உள்ளம்)

    'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' (மனிதர்கள் என்னும் ஒரே குலம்தான் உள்ளது! எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்றே தெய்வம்)

    இவை 'திருமந்திரம்' என்னும் தீந்தமிழ்க் கடலின் ஒரு சில தேன்துளிகள்!

    Next Story
    ×