என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
திருவானைக்காவல் திருத்தல மகிமை
- ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார்.
- எனவே இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.
பஞ்சபூதத் தலங்களில் அப்பு (நீர்) தலமாக விளங்குவது திருவானைக்காவல்.
மூலவர் ஜலகண்டேசுவரராகவும், அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியாகவும் வீற்று இருக்கின்றனர்.
வராகி அம்சமான அகிலாண்டேசுவரி ஆரம்ப காலத்தில் உக்கிர மூர்த்தியாகவே இருந்தாள்.
எனவே பூஜை செய்பவர்களும், பக்தர்களும் கோவிலின் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்தே வழிபாடுகளை நடத்தி வந்தார்கள்.
இதை அறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தினார்.
உடனே இரண்டு ஸ்ரீசக்கரங்கள் செய்து அதில் அம்மனின் கோபம் இறங்க வேண்டும் என்று வேண்ட, அதன்படியே அம்பாளின் கோபம் ஸ்ரீ சக்கரத்தில் இறங்கியது.
அம்பாள் சாந்த சொரூபியானாள்.
ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார்.
எனவே இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.
ஒன்று சிவச்சக்கரம். மற்றொன்று ஸ்ரீசக்கரம்.
இந்த சக்கரங்கள் மற்ற அம்பாளின் சந்நிதியில் இல்லாத சிறப்பம்சம் பெற்றவை ஆகும்.
மேலும் அம்பாளுக்கு எப்போதும் கோபம் ஏற்படாதவாறு பிரசன்ன விநாயகரை அம்பாளுக்கு முன்னேயும், முருகனைப் பின்னேயும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து விட்டார்.