search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    உரலில் கட்டுண்ட திருவிளையாடல்
    X

    உரலில் கட்டுண்ட திருவிளையாடல்

    • யசோதைக்குப் பெரும் கோபம் வந்தது.
    • ஒரு கயிற்றை எடுத்து குழந்தையின் இடுப்பில் கட்டினாள்.

    குழந்தை கிருஷ்ணன் வளர வளர அவனுடைய விஷமங்களும் வளர்ந்து வந்தன.

    பாத்திரங்களில் உள்ள தயிர், பால் முதலியவற்றைக் கவிழ்த்து விடுவான்.

    அவனுக்கு வெண்யிணையில் பிரியம் அதிகம். தயிர் பானையில் கைையவிட்டு அளைவான். மேலெல்லாம் பூசிக்கொள்வான்.

    அவனுக்கு வெண்ணையை கொடுத்து மகிழ்வார்கள். அவனும் விருப்பமாய் வாங்கி உண்பான். கண்ணனுடைய வருகைக்குப் பின்னர் கோகுலத்தில் பால்வளம் பெருகிற்று.

    ஒரு நாள் யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அங்கு வந்து சேர்ந்த கிருஷ்ணன் தயிர்ப் பானையில் கையை விட்டு வெண்ணையை வாரினான்.

    தயிர் கடைய ஒட்டாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.

    யசோதைக்குப் பெரும் கோபம் வந்தது. ஒரு கயிற்றை எடுத்து குழந்தையின் இடுப்பில் கட்டினாள். கயிற்றின் மறு முனையை ஓர் உரலுடன் சேர்த்துக் கட்டினாள்.

    யசோதை உள்ளே சென்றதும் குழந்தை உரலை இழுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் போனான்.

    குபேரனுடைய மக்களாகிய நளகூபரனும் மணிக்கிரீவனும் நாரதர் சாபத்தால் மருதமரமாகி, தோட்டத்தில் இருந்தனர்.

    பகவானுடைய அனுக்கிரகத்தால் அவர்கள் பழைய உருவைப் பெறுவார்கள் என்று முனிவர் சாப விமோசனமும் அளித்திருந்தார்.

    அந்த நாளை எதிர்நோக்கியிருந்தார்கள் அவர்கள்.

    குழந்தை மெதுவாக அந்த மருத மரங்களை நோக்கிச் சென்றான்.

    அவற்றின் இடையே நுழைந்து அப்பால் சென்றபோது உரல் மரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது.

    கிருஷ்ணன் முயன்று இழுத்த போது மரங்கள் இரண்டும் வேரோடு சாய்ந்து போயின.

    சாபம் நீங்கபெற்ற நளகூபரனும் மணிக்கிரீவனும் தேஜோ மயமாய் வெளிப்பட்டனர்.

    பகவானைப் பணிந்து விடைபெற்று வாண்வெளியில் மறைந்தனர்.

    Next Story
    ×