என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
வீடுகளில் எந்த திசையில் துளசி மாடம் வைக்கலாம்?
- வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நல்ல பலன்களே கிடைக்கும்.
- ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்தில் துளசி மாடம் இருந்தால் நல்லது.
ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்தில் துளசி மாடம் இருந்தால் நல்லது.
ஆனால், பெரும்பாலும் புறா கூண்டுகளைப் போல அபார்ட்மெண்ட் வாழ்க்கையாகி விட்ட மாநகரத்தில்
முற்றங்களை எல்லாம் கனவுகளிலும் யோசித்துக் கொண்டிருக்க முடியாது.
அப்படிப்பட்டவர்கள் முற்றங்கள் இல்லையென்றாலும், துளசி செடியை கிழக்கு திசையில்,
தரைமட்டத்தில் வைத்தால் நல்லது.
இப்படி கிழக்கு திசையில் துளசி செடியை வைத்து வழிபட்டு வணங்கி வருவது
பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நல்ல பலன்களே கிடைக்கும்.
அதே சமயம் துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக் கூடாது.
ஆண்டு முழுவ தும் பசுமையாக இருக்கும் மரங்களை வைத்து, வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும்.
இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவு தான் நற்பலனை கொடுக்கும்.
சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய மரங்களை வளர்க்காமல் இருப்பது நல்லது.
பொதுவாக மற்ற அனைத்து செடிகளையும்விட துளசி, அதிகளவில் ஆக்சிஜனை வெளியேற்றும் சக்தி கொண்டது.
அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்து, துளசியை வழிபட்டு வந்தால்,
ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் தானாய் வந்து சேரும்.
உங்களால் வலம் வர முடியாவிட்டாலும், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் துளசி செடியின் அருகே அமருங்கள்.