search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    விநாயகர் முக்கிய தகவல்கள்-20
    X

    விநாயகர் முக்கிய தகவல்கள்-20

    • விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.
    • மராட்டியத்தில் தேங்காய்களை உடைத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு வழங்குகின்றார்கள்.

    01. விநாயகர் புகழ்பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.

    02. விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.

    03. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகிய மூவரும் போற்றி வணங்குகின்ற விநாயகர் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் ஆவார்.

    04. காரைக்காலினைச் சேர்ந்த தாமானங்குடி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பெரிதும் சிறிதுமாய் இரண்டு விநாயகர் திருவுருவங்கள் உள்ளன. ஒன்று பிரெஞ்சு விநாயகர் மற்றொன்று இங்கிலீஷ் விநாயகர்.

    05. விநாயகர் சதுர்த்தி விழா மராட்டியத்திலும், ஆந்திராவிலும் 11 நாட்கள் வழிபாடாகக் கொண்டாடப்படுகின்றது.

    06. பிள்ளையாருக்கு ஞானக் கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

    07. மராட்டியத்தில் தேங்காய்களை உடைத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு வழங்குகின்றார்கள்.

    08. மணிப்பூர் மாநிலத்தில் மைரி என்னும் மக்கள் மூங்கில் அரிசியைக் கணபதிக்கு நிவேதனம் செய்து வழிபாடு செய்கின்றார்கள்.

    09. சென்னை தியாகராய நகரில் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் சித்தி சக்தியுடன் பத்துத் தலை கொண்ட வலஞ்சுழி விநாயகர் உள்ளார்.

    10. எகிப்தில் உள்ள விநாயகர் ஒருவர் இருக்கின்றார். இவர்தமது கையில் சாவி வைத்து இருக்கின்றார். தம்மை வழிபாடு செய்பவர்களுக்கு இவர் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து விடுவார் என்னும் நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

    11. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்றார்.

    12. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.

    13. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.

    14. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.

    15. சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் என்று தொடங்கும் பிரபலமான விநாயகர் துதி இடம்பெறுவது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் தொடக்கத்தில்தான். இந்தத் துதி பல்வேறு பூஜைகளுக்கும், நியமங்களுக்கும் தொடக்கத்தில் சொல்லப்படுகின்றது.

    16. விக்னம் என்றால் கஷ்டம். கஷ்டங்களை அகற்றுபவர் என்பதால் விக்னேஸ்வரர் என்கிற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.

    17. விநாயகர் ஐந்து கரங்களைக் கொண்டு விளங்குவதினால் 'ஐங்கரன்' என்று அழைக்கப்படுகின்றார்.

    18. அசோகர் காலத்தில் அவர் மகள் சாருமதி நேபாளத் தில் விநாயகருக்குக் கோவில் கட்டினார்.

    19. புத்தர்கள் விநாயக வழிபாடு செய்கின்றார்கள்.

    20. விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து ஒன்பது நாள் விநாயக விரதம் இருந்து வணங்குதல் விநாயக நவராத்திரி எனப்படும்.

    Next Story
    ×