search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஏன் திருக்கல்யாண விழாவில் கலந்துகொள்ள வேண்டும்?
    X

    ஏன் திருக்கல்யாண விழாவில் கலந்துகொள்ள வேண்டும்?

    • தமிழகத்தில் உள்ள சில தலங்கள், இறைவன், இறைவி திருக்கல்யாணத்துக்கு மிகவும் சிறப்புப் பெற்றவை.
    • இல்வாழ்க்கைக்கு அதிக பலன்களை அள்ளித்தரும் ஆற்றல் பெற்றவை.

    தமிழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஆலயங்களில் பங்குனி உத்திரம் தினத்தன்று தான் திருக்கல்யாண விழாக்கள் நடத்தப்படுகிறது.

    அன்று பக்தர்கள் விரதம் இருப்பது காலம், காலமாக நடந்து வருகிறது. இந்த விரதத்துக்கு திருமண விரதம் என்று பெயர்.

    வீட்டில் மங்கலகாரியம் நடப்பதற்கு துணை புரிவதால், எல்லா தலங்களிலும் திருக்கல்யாண விழாக்கள் ஆண்டு தோறும் தவறாமல் நடத்தப்படுகிறது.

    எந்த ஊரில் உள்ள ஆலயத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் மிகச் சிறப்பாக திருக்கல்யாணம் நடத்தப்படுகிறதோ அந்த ஊரில் உள்ள பெண்கள் திருமண யோகத்தை உரிய காலத்தில் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    ஆனால் பெரும்பாலான பக்தர்கள் இந்த ஐதீகத்தை புரிந்து கொள்ளாமல் ஆலயங்களில் நடத்தப்படும் திருக்கல்யாண விழாக்களில் கலந்து கொள்ளாமல் உள்ளனர்.

    எனவே இனியாவது ஆலய திருக்கல்யாணங்களில் உள்ள ரகசியத்தை புரிந்து கொண்டு அதில் பங்கேற்று இறைவழிபாடு செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள சில தலங்கள், இறைவன், இறைவி திருக்கல்யாணத்துக்கு மிகவும் சிறப்புப் பெற்றவை.

    இல்வாழ்க்கைக்கு அதிக பலன்களை அள்ளித்தரும் ஆற்றல் பெற்றவை. அவற்றை தெரிந்து கொண்டு வழி பட்டால் உரிய பலனை பெற முடியும்.

    உலகமும், உயிர்களும் தொடர்ந்து இயங்க, இறைவன் நமக்கு ஆற்றும் பேரருளை நினைவுப்படுத்தும் விதமாக திருக்கல்யாணங்கள் நடத்தப்படுகிறது என்ற உண்மையை நமது வாரிசுகளுக்கு நாம் அவர்களை ஆலயங்களுக்கு அழைத்து செல்லும் போது எடுத்துச் சொல்ல வேண்டும்.

    திருக்கல்யாண நிகழ்ச்சிகளை வெறும் சடங்காக கருதாமல் அதில் உள்ள தாத்பர்யங்களை அனைவரும் அறிந்து கொள்ள செய்தால்தான் திருக்கல்யாண நிகழ்வுகள் மூலம் வெற்றியும் & பலனும் கிடைக்கும்.

    இதே போல ஆலயங்களில் கார்த்திகை மாதம் நடத்தப்படும் சங்காபிஷேகத்தால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து வற்றாத செல்வத்தை வழங்குவார் என்பது ஐதீகம்.

    Next Story
    ×