பைரவ வழிபாட்டில் பயன்படுத்தப்படும் காய்கறி பழங்களின் பலன்கள்
- வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கைஅமையும்.
- மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.
பைரவருக்கு பூசணிக்காய், தேங்காயில் தீபம் ஏற்றுவதை பெருபாலான பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
ஆனால் ராமகிரி தலத்தில் பூசணிக்காய் மற்றும் தேங்காயில் எண்ணையை ஊற்றி தீபம் ஏற்ற தடை விதிக்கப்பபட்டுள்ளது.
அகல் விளக்குகளில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ராமகிரி ஆலயத்தின் அருகில் தேங்காய், பூசணிக்காய் போன்றவை விற்பனை செய்யப்படுவதில்லை.
அகல் விளக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
என்றாலும் கால பைவரருக்கு பழம் வகைகளில் தீபம் ஏற்றுவது மிக சிறப்பானதாக கூறப்பட்டுள்ளது.
எனவே பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தி இருப்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1.தேங்காய்-குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்.
2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி-நரம்பு வியாதி, திருமணம் தடை நீங்கும்.
3.கொடை மிளகாய்-புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.
4.கொய்யா பழம்/ கத்திரிக்காய்-நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.
5.பீட்ருட்- ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.
6.பாகற்காய்-சனி பாதிப்பு நீங்கும், கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.
7.வில்வபழம்- மாதுளம்-லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.
8.ஆரஞ்சு பழம்-தொழில் விருத்தி ஏற்படும்.
9.அன்னாசிப்பழம்-சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.
10.பப்பாளி பழம்-திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
11.இளநீர்-ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.
12.வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கைஅமையும்.
13.மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.