ஆன்மிக களஞ்சியம்

ஏகாதசி விரதங்களும் அதன் பலன்களும்

Published On 2024-11-07 11:50 GMT   |   Update On 2024-11-07 11:50 GMT
  • ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது புத்ரஜா என்றும், தேய்பிறை ஏகாதசியானது காமிகா என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளது.

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும்.

அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.

இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும் வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.

• சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி காமதா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி பாப மோகினி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறும்.

• வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி மோகினி ஏகாதசி என்றும், தேய்பிறை ஏகாதசி வருதித் ஏகாதசி என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள்  இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

• ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி அபார ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

• ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி சயனி என்றும் தேய்பிறை ஏகாதசி ஏகாதசி யோகினி என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகராக பலன்கள் கிடைக்கப்பெறும்.

• ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது புத்ரஜா என்றும், தேய்பிறை ஏகாதசியானது காமிகா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

• புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி பத்மநாபா என்றும் தேய்பிறை ஏகாதசி அஜா என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமைவளரும்.

Similar News