ஆன்மிக களஞ்சியம்

எப்படி வழிபாடு செய்வது?

Published On 2024-05-29 11:17 GMT   |   Update On 2024-05-29 11:17 GMT
  • அவரையும் வழிபட்ட பிறகு அருகில் இருக்கும் மண்டபத்துக்கு சென்று சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம்.
  • இந்த வரிசையில் தான் ராமகிரி கால பைரவர் ஆலயத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

ராமகிரி கால பைரவர் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அங்கு எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்கு சில ஐதீகங்கள் உள்ளன.

அவற்றை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ராமகிரி ஆலயத்துக்குள் நுழைந்ததும் இடது பக்கத்தில் நந்தி தீர்த்தம் இருப்பதை காணலாம்.

அங்கு சென்று தீர்த்தத்தில் கால்களை நனைத்து, தலையில் தண்ணீரை தெளித்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அங்கிருந்து அருகில் உள்ள விநாயகரை வழிபட வேண்டும்.

பிறகு நந்தி தீர்த்தத்தில் இருந்து ஏறி மேலே வந்ததும் அருகில் லிங்கம் ஒன்று இருப்பதை பார்க்க முடியும்.

அவரை வழிபட்டு விட்டு ஆலயத்துக்கு செல்ல வேண்டும்.

வழியில் உள்ள கடையில் 8 அகல் விளக்குகளை வாங்க வேண்டும்.

8 அகல் விளக்கு மற்றும் அதை ஏற்றுவதற்கான எண்ணை, திரிகள் சேர்த்து ரூ.50 கட்டணம் வசூலிக்கிறார்கள்.

8 அகல் விளக்குகளுடன் ஆலயத்தின் நுழைவுவாயில் வலது பக்கத்தில் இருக்கும் தீபம் ஏற்றும் பகுதிக்கு செல்ல வேண்டும்.

அங்கு 8 அகல் விளக்குகளையும் ஏற்ற வேண்டும். அதன் பிறகே ஆலயத்துக்குள் நுழைய வேண்டும்.

ஆலயத்தின் முக்கிய நுழைவு வாயில் அருகே இடது பக்கத்தில் தேங்காய் உடைப்பதற்கு என்று ஒரு இடம் உள்ளது.

அங்கு தேங்காய் உடைத்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு கருவறை பகுதிக்கு சென்று கால பைரவரை வழிபட வேண்டும்.

அவரை வழிபட்ட பிறகு 8 தடவை சுற்றலாம்.

அல்லது ஒரே ஒரு தடவை சுற்றி வந்து வழிபாட்டை முடித்துக் கொள்ளலாம்.

பைரவரை வழிபட்ட பிறகு அருகே உள்ள காளிகா தேவியையும் வழிபட வேண்டும்.

பின்னர் அருகில் உள்ள சிவன் சன்னதிக்கு செல்ல வேண்டும்.

வாலீஸ்வரர் என்ற பெயருடன் திகழும் சிவபெருமானை வணங்கி விட்டு அவருக்கு எதிரில் இருக்கும் பக்த ஆஞ்சநேயரையும் வழிபட வேண்டும்.

சிவன் சன்னதியிலும் கோஷ்டத்துடன் கூடிய ஒரு பிரகாரம் உள்ளது.

அந்த பிரகாரத்தில் சப்தமாதர்கள் மற்றும் பல்வேறு இறை மூர்த்திகள் உள்ளனர்.

அவர்களையும் வழிபட வேண்டும்.

இதையடுத்து அந்த சன்னதியில் இருந்து வெளியேறி வந்தால் அம்பாள் சன்னதியை காணலாம்.

அங்கு மரகதாம்பாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

அவரையும் வழிபட்ட பிறகு அருகில் இருக்கும் மண்டபத்துக்கு சென்று சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம்.

இந்த வரிசையில் தான் ராமகிரி கால பைரவர் ஆலயத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

ஆனால் பைரவரை மட்டுமே பிரதானமாக வணங்குபவர்கள் சிவன் சன்னதிக்கு செல்லாமல்கூட வழிபாட்டை முடித்து விடுவதுண்டு.

கால பைரவர் ஆலயத்தில் வழிபாடுகள் நிறைவு பெற்ற பிறகு மலை மீது இருக்கும் பாலமுருகர் ஆலயத்துக்கும் சென்று வழிபாடு செய்து வரலாம்.

இந்த வழிபாடுகள் அனைத்தையும் சுமார் 45 நிமிடங்களில் செய்து முடித்து விடலாம்.

Tags:    

Similar News