ஆன்மிக களஞ்சியம்

வாலி வாலால் கட்டி இழுத்ததால் சாய்ந்த நிலையில் இருக்கும் வாலீஸ்வரர்

Published On 2024-05-29 11:14 GMT   |   Update On 2024-05-29 11:14 GMT
  • கோஷ்டத்தில் கஜ விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர்.
  • சப்த மாதர்களுக்கு அடுத்தபடியாக சபரிமலை அய்யப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்.

கருவறையில் கால பைரவர் இருக்கும் இடம் மிகப்பெரியதாகவும் இல்லாமல், மிகச்சிறியதாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் உள்ளது.

அருகே மிகச்சிறிய தனி சன்னதியில் காளிகாதேவி இருக்கிறார்.

பிரகாரம் சமதளமாக இல்லாமல் பாறை போன்ற நிலையில் உள்ளது. எனவே கருவறையை சுற்றி வருபவர்கள் கவனமுடன் வலம் வர வேண்டும்.

அருகில் உள்ள வாலீஸ்வரர் சன்னதிக்கு செல்லும்போது இடது பக்கத்தில் முதலில் முருகர் சிலையை காணலாம்.

அவரை வழிபட்ட பிறகு வாலீஸ்வரரை வழிபட செல்ல வேண்டும்.

வாசலில் சந்திரமவுலீஸ்வரர், துவார விநாயகர் உள்ளனர்.

அவர்களை வழிபட்டு உள்ளே சென்றால் வாலீஸ்வரரை காணலாம்.

வாலி தனது வாலால் லிங்கத்தை கட்டி இழுத்ததை பிரதிபலிக்கும் வகையில் வாலீஸ்வரர் லிங்கம் சற்று சாய்ந்த நிலையில் இருப்பதை பார்க்க முடியும்.

அவருக்கு நேர் எதிரில் பக்த ஆஞ்சநேயர் இருக்கிறார்.

அவருக்கு பிறகுதான் இரண்டு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

இவர்களை வழிபட்ட பிறகு பிரகாரத்தை சுற்றி வரலாம்.

அந்த பிரகாரத்தின் இடது பக்கத்தில் சப்த மாதர்கள் உள்ளனர்.

கோஷ்டத்தில் கஜ விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர்.

சப்த மாதர்களுக்கு அடுத்தபடியாக சபரிமலை அய்யப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்.

அவரை தொடர்ந்து அப்பர், வீர பத்திரர், அகத்தியர், ஆஞ்சநேயர் ஆகியோரை காணலாம்.

சூரியனுக்கும் தனி வழிபாடு அங்கு நடக்கிறது.

பிரகார வழிபாடு முடிந்ததும் மரகதாம்பிகையை பார்க்கலாம்.

சுமார் 3 அடி உயரத்தில் அழகுற காட்சி அளிக்கும் மரகதாம்பிகை பெண்களின் குறை தீர்க்கும் தெய்வமாக திகழ்கிறாள்.

இவ்வளவுதான் ராமகிரி ஆலயத்தில் உள்ள இறை சன்னதிகள் ஆகும்.

சுமார் 30 நிமிடங்களில் வழிபாட்டை முடித்து விடலாம்.

Tags:    

Similar News