ஆன்மிக களஞ்சியம்

வெண்ணெய் காப்பு அலங்காரம்

Published On 2024-02-26 12:15 GMT   |   Update On 2024-02-26 12:15 GMT
  • இந்த வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்ய 3 மணி நேரம் ஆகும்.
  • கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்கிறார்கள்.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்கிறார்கள்.

இந்த வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்ய 3 மணி நேரம் ஆகும்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வது ஏன்? என்பது குறித்து வரலாறு உண்டு.

ராவணன் சம்காரத்திற்கு பிறகு தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த 2 அசுரர்களை ஒழிக்க ஆஞ்சநேயரை தேவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

ஆஞ்சநேயருக்கு போரில் உதவ ராமர் வில்லையும், பிரம்மா, சிவபெருமான் உள்ளிட்ட மற்ற கடவுள்கள் அவரவர்களுக்குரிய ஆயுதங்களையும் வணங்கி வாழ்த்து கூறினர்.

கண்ணன் வெண்ணெய் அளித்து இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றி அடையும் என்றும், அசுரர்களையும் அழித்து விடலாம் என்று சொல்லி வாழ்த்தினார்.

அதன்படி ஆஞ்சநேயர் கையில் ஆசீர்வாதமாக அளிக்கப்பட்ட வெண்ணெய் உருகுவதற்குள் 2 அசுரர்களையும் போரில் சந்தித்து ஆஞ்சநேயர் அவர்களை அழித்துவிட்டார்.

அதுபோல ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்குள் காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News