- சிவ வைணவ ஆலய சர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
- விநாயக நவராத்திரி என விநாயகர் சதுர்த்தி முதல் கொண்டாடப்பட்டு வரும் விசேஷ வழிபாடுகள் இந்த சன்னதியில் நடைபெறும்.
தருமமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னையில் கோசை மாநகர் என்ற பெயரில் விளங்கிய கோயம்பேடும், அரும்பாக்கம் எனப்படும் நகருக்கும் நடுவில் ஒரு சுந்தர கணபதி கோவில் உள்ளது.
சுற்றிலும் அருகம்புல்லால் சூழப்பட்ட காடாக ஒரு காலத்தில் இருந்ததால் அருகம்புல் பாக்கமாகி காலப்போக்கில் அரும்பாக்கமாக மருவியது.
இத்தலம் சத்திய விரதச் சேத்திரம் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு சத்யம்-அறம், பாக்கமாகி அரும்பாக்கமாக ஆகிவிட்டது எனவும் கூறுவர்.
பெண்கள் பலர் கூடி இங்கே ஒரு கணபதி உருவத்தை வழிபட்டு, காலப்போக்கில் பக்தர்கள் கூடி 1969 முதல் மிகச் சிறப்பான சக்தி உடைய, அழகு பொருந்திய விநாயகர் சிலையை ஸ்தாபித்து எல்லாவித விசேஷங்களையும் செய்து வருகின்றனர்.
சிவ வைணவ ஆலய சர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
விநாயக நவராத்திரி என விநாயகர் சதுர்த்தி முதல் கொண்டாடப்பட்டு வரும் விசேஷ வழிபாடுகள் இந்த சன்னதியில் நடைபெறும்.
அருகால் வழிபட்டு வர ஆனந்தம் அருளும் இவரை வழிபட்டு வரலாம். தொடர்புக்கு:- 044-24756514.