null
தோப்புக் கரணம் உருவாக காரணமாய் இருந்த மகாவிஷ்ணு
- தோப்புக் கரணம் போடுவது நல்ல உடற்பயிற்சி முறை.
- இதைச் செய்வதால் உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து மூளைக்கு பலமும், மன அமைதியும் ஏற்படும்.
பிள்ளையாருக்கு முன் தோப்புக் கரணம் போடும் வழக்கம் வர காரணமாக இருந்தவர் மகா விஷ்ணுவே.
ஒருசமயம் விஷ்ணு அசந்து தூங்கிய போது அவரை எழுப்பி விட சக்கரத்தைப் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார்.
மருமகனான அவரிடம் சக்கரத்தை வாங்கிட அதட்டி, மிரட்டி கேட்க முடியாது.
இதனால் அவரைச் சிரிக்க வைத்தால் சக்கரம் கீழே விழுந்துவிடும் எடுத்துக் கொள்ளலாம் என்று கருதிய விஷ்ணு இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு கீழும் மேலும் குதித்தார்.
விநாயகர் சிரிக்க சக்கரம் கீழே விழுந்து விட்டது. விஷ்ணு அதை எடுத்துக் கொண்டு நகர்ந்தார்.
தோப்புக் கரணம் போடுவது நல்ல உடற்பயிற்சி முறை.
இதைச் செய்வதால் உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து மூளைக்கு பலமும், மன அமைதியும் ஏற்படும்.
ஆணவமும் மாயையும் அகன்றிட அனைவரும் தோப்புக்கரணம் (தோர்பி கரணம்) போடலாம்.
உண்ணி அப்பம் பிரசாதம்
தமிழ்நாட்டில் மோதகமே விநாயகருக்கு முக்கிய பிரசாதம்.
ஆனால் கேரளாவில் கொட்டாரக்கரா என்ற இடத்தில் சன்னதி முன்பாகவே உண்ணி அப்பம் தயார் செய்யப்பட்டு படைத்து வினியோகிக்கப்படுகிறது.
ஈஸ்வர மங்கலம் விநாயகர் கோவிலும் உண்ணி அப்பமே முக்கிய நிவேதனப் பொருள்.