- அருள் நிறைந்த கோவில்கள் என்றால் அந்த காலத்தில் பக்தர்களுக்கு இறைவனே நேரில் காட்சி கொடுத்த ஸ்தலங்களை குறிப்பிடலாம்.
- தற்காலத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுதலின் பேரில் கோவில்கள் சிறப்படைவதையும் குறிப்பிடலாம்.
இந்துக் கோவில்களில் புராண சிறப்பு மிக்க கோவில்கள், பாடல்பெற்ற கோவில்கள், நவீன காலத்தில் அருள் நிறைந்த கோவில்கள் என இருக்கின்றன.
புராண சிறப்பு மிக்க கோவில்கள் என்பது இறைவனின் அவதாரங்கள் நிகழ்ந்த ஊர், அல்லது இறைவன் திருப்பாதங்கள் பதிந்த ஊர், அல்லது இறைவன் திருவிளையாடல்களை நிகழ்த்திய ஊர்களில் அந்த தெய்வத்திற்கான கோவில்கள்தான் புராண சிறப்பு மிக்க கோவில்கள்.
இதனை அடுத்து பாடல்பெற்ற ஸ்தலங்கள் பெருமையாக பேசப்படுகின்றன.
சமயக் குரவர்கள், ஆழ்வார்களால் பாடல்பெற்ற ஸ்தலங்கள் அவை.
அவர்கள் பெரும்பாலும் புராண சிறப்பு மிக்க கோவில்களை பற்றியே அதிகமாக பாடியுள்ளனர்.
அருள் நிறைந்த கோவில்கள் என்றால் அந்த காலத்தில் பக்தர்களுக்கு இறைவனே நேரில் காட்சி கொடுத்த ஸ்தலங்களை குறிப்பிடலாம்.
தற்காலத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுதலின் பேரில் கோவில்கள் சிறப்படைவதையும் குறிப்பிடலாம்.
இங்கே தோரணமலை சித்தர்கள் வழிபட்ட முருகன் இருப்பதாலும், சித்தர்களின் அதிர்வலைகள் மலையில் எதிரொலிப்பதாலும், மூலிகை மணம் மலை நிறைந்திருப்பதாலும் சிறப்பு பெறுகிறது.
அதோடு பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தலமாகவும் விளங்குகிறது.