null
- கைலாய மலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது.
- அப்போது அங்கு தேவர்கள் பலரும் கூடியதால் அந்த இடம் தாழ்ந்து தெற்கு உயர்ந்துவிடுகிறது.
தோரணமலைக்கு அகத்தியர் ஏன் வந்தார்?
எப்படி இதன் சிறப்பை அறிந்தார்? என்பதை புராண வரலாறு மூலம் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
கைலாய மலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது.
அப்போது அங்கு தேவர்கள் பலரும் கூடியதால் அந்த இடம் தாழ்ந்து தெற்கு உயர்ந்துவிடுகிறது.
இதனை சரி செய்ய சிவபெருமான் அகத்தியர் என்னும் குருமுனியை தென் திசை நோக்கி அனுப்புகிறார்.
அவர் பொதிகை மலை வந்ததும் நிலம் சரியானது.
இங்கேதான் முருகனிடம் இருந்து அகத்தியர் தமிழ் கற்றதாகவும் அதன்பின் தமிழுக்கு இலக்கணம் படைத்ததாவும் கூறப்படுகிறது.
அகத்தியர் தென்பொதிகைக்கு இந்த திருக்குற்றாலம் மற்றும் தோரணமலை வழியாத்தான் வந்திருக்க முடியும்.
அப்படி வரும்போது தோரணமலையின் மூலிகை காட்டையும், சுனைகள் நிறைந்து இருப்பதையும் கண்டு வியந்திருக்க வேண்டும்.
மேலும் பல இடங்களில் பாதுகாப்பாக தங்குவதற்கு பாறை குகைகள் இருப்பதையும் அறிந்தார்.
தமிழுக்கு இலக்கணம் வகுத்தபின்னர், இந்த தோரணமலை பகுதியை தேர்வு செய்து சித்தர்களுக்கு தமிழ், சித்தவைத்தியம் உள்பட பல்வேறு நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கும் பாடசாலையை அமைத்துள்ளார்.