null
- மலை அடிவாரத்தில் விநாயகர் சன்னதிக்குப் பின்புறம் ஒரு பாறையில் பாலமுருகன் சன்னதி உள்ளது.
- அந்த முருகன் சுதையாக வடிவமைக்கப்பட்டு அழகிய வண்ணத்தில் காட்சி தருகிறார்.
தோரணமலையின் உச்சியில் முருகனுக்கும், அடிவாரத்தில் விநாயகருக்கும் பிரதான சன்னதிகள் உள்ளன.
மலை உச்சியில் கிழக்கு திசையில் பத்திரகாளி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.
பத்திரகாளிஅம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அந்த சன்னதியை சுற்றி வந்து வழிபட வசதி உள்ளது.
தோரணமலையை வெகு தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த சன்னதிதான் நம் கண்ணுக்குத் தெரியும்.
மலைமீதுள்ள முருகன் கோவில்களில் எல்லாம் முருகனின் பாதம் அமையபெற்று இருக்கும்.
அதேபோல் இங்கும் மலையின் மேல் பாறையில் பாதச் சுவடுகள் செதுக்கப்பட்டு உள்ளன.
முருகன் ஒரு பாதத்தை நேராக பதித்தபோலவும், இன்னொரு காலின் முட்டை பதித்திருப்பது போலவும், வேல் ஊன்றிய குழியும் அங்கே காணப்படுகிறது.
இதனை சுற்றி சன்னதி அமைக்கும் மேற்கொள்ளப்பட்டு ஏதோ காரணத்தால் பணி நிறைவுபெறாமல் நின்றுபோனது.
மலை அடிவாரத்தில் விநாயகர் சன்னதிக்குப் பின்புறம் ஒரு பாறையில் பாலமுருகன் சன்னதி உள்ளது.
அந்த முருகன் சுதையாக வடிவமைக்கப்பட்டு அழகிய வண்ணத்தில் காட்சி தருகிறார்.
அந்த சன்னதிக்கு செல்ல படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதைப்பார்க்கும்போது இதுவும் ஒரு தனி முருகன் மலையோ என்று எண்ணத்தோன்றும்.
மலை ஏற முடியாதவர்கள் இந்த முருகனை வணங்கிவிட்டு வருகிறார்கள்.
விநாயகர் சன்னதிக்கு வடபுறம் இரண்டு சுனைகள் உள்ளன.
அந்த இரண்டு சுனைக்கு அருகேயும் சப்த கன்னியர்கள் சிலை உள்ளது.
இதில் வடபுறம் உள்ள சப்த கன்னியருக்கு தனி சன்னதியும் பிரகாரமும் அமைக்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சன்னதிக்கு கிழக்கே ஈசான மூலையில் நவக்கிரக சன்னதி உள்ளது.
இங்கும் பக்தர்கள் சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதவிர கோவிலின் வடபுறம் சிவன், கிருஷ்ணர், லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் சுதை வடிவில் அருள்பாலிக்கிறார்கள்.
இந்த சிலைகள் கண்ணுக்கு அழகாக வண்ணத்தில் அமைந்துள்ளன.
மலைப்பாதையில் ஓரிடத்தில் சிறிய ஊற்று வடிவில் சுனை ஒன்று ஒன்று இருகிறது.
அந்த இடத்தில் சிறிய சிவலிங்கம் இருக்கிறது.
அதேபோல் மலை ஏறும் பக்தர்கள் களைப்படையாமல் இருக்க வழியில் ஓரிடத்தில் வழிபடுவதற்கு பீடம் அமைத்துள்ளார்கள்.