ஆன்மிக களஞ்சியம்

தோரணமலை குகை முருகன் சன்னதியின் அமைப்பு

Published On 2024-12-02 11:44 GMT   |   Update On 2024-12-02 11:44 GMT
  • பொதுவாக பெரும்பாலான கோவில்கள் கிழக்கு நோக்கியே இருக்கும்.
  • அந்த வகையில் இந்த குகை சன்னதியும் கிழக்கு நோக்கிதான் அமைந்துள்ளது.

தோரணமலை முருகன் சன்னதி மனித கட்டுமானத்தில் உருவானது அல்ல.

இயற்கையாக அமைந்த குகைகளே மூலஸ்தானம்.

பெரும் பாறையின் இடையே அமைந்த இந்த குகை போகப்போக சுருங்கிக்கொண்டே செல்கிறது. அதன் முடிவு பற்றி யாரும் அறியார்.

பொதுவாக பெரும்பாலான கோவில்கள் கிழக்கு நோக்கியே இருக்கும்.

அந்த வகையில் இந்த குகை சன்னதியும் கிழக்கு நோக்கிதான் அமைந்துள்ளது.

அந்த சன்னதியில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

காலையில் இந்த முருகனை சூரியன் தன் ஒளிக் கதிர் என்னும் கரங்களால் தொட்டு வழிபடுகிறார்.

கோவில் பாதுகாப்புக்காக குகை சன்னதியின் முகப்பு பகுதியில் செங்கல்கற்களால் சுவர் அமைத்து கதவு போடப்பட்டு உள்ளது.

ஆரம்பத்தில் முருகனை வழிபட செல்லும் பக்தர்களின் வசதிக்காக அந்த சன்னதியின் முன்பு சிமெண்டினால் தளம் அமைத்து உயர்த்தப்பட்டிருந்தது.

அதன்பின் சன்னதி முன்பு சிறிய அளவிலான மண்டபம் கட்டுப்பட்டது.

அந்த மண்டபத்தில் முருகனுக்கு நேர் எதிரே மயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இக்கிறது.

அந்த மண்டபத்தில் நின்று பக்தர்கள் வழிபடலாம்.

அந்த மண்டபத்தில் பக்தர்கள் நேர்த்திகடனாக வழங்கி மணிகள் பல தொங்கவிடப்பட்டு உள்ளன.

Similar News