அதிநவீன அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட நின்ஜா ZX-6R.. இந்திய விலை எவ்வளவு தெரியுமா?
- இந்த மோட்டார்சைக்கிள் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- 2024 ZX-6R மாடல் யூரோ 5 / பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
கவாசகி இந்தியா நிறுவனம் தனது 2024 நின்ஜா ZX-6R மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நின்ஜா ZX-6R விலை ரூ. 11 லட்சத்து 09 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 60 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
அப்டேட்களை பொருத்தவரை நின்ஜா ZX-6R மாடலில் மேம்பட்ட ஸ்டைலிங், தோற்றத்தில் முன்பை விட அதிக ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மெட்டாலிக் கிராஃபைட் கிரே மற்றும் லைம் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 2024 ZX-6R மாடல் யூரோ 5 / பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், புதிய கவாசகி நின்ஜா ZX-6R மாடலில் 636 சிசி, இன்லைன் 4 சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 128 ஹெச்.பி. பவர், 69 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் குயிக்ஷிஃப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய மாடலில் பழைய எல்.சி.டி. யூனிட்-க்கு மாற்றாக அதிநவீன டி.எஃப்.டி. யூனிட் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் ரைடு மோட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷோவா SFF-BP ஃபோர்க்குகள், லின்க் டைப் மோனோஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310mm டிஸ்க், பின்புறம் 220mm டிஸ்க் வழங்கப்படுகிறது.