பைக்

ரூ. 27 லட்சம் பட்ஜெட்டில் அறிமுகமான 2023 கவாசகி Z H2 சீரிஸ்..

Published On 2023-08-08 13:51 GMT   |   Update On 2023-08-08 13:51 GMT
  • 2023 கவாசகி Z H2 சீரிசில் 998சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட, லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது.
  • புதிய கவாசகி Z H2 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

கவாசகி நிறுவனத்தின் 2024 Z H2 மற்றும் Z H2 SE மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை ரூ. 23 லட்சத்து 48 ஆயிரம், என்று துவங்குகிறது. இதன் பிரீமியம் மாடல் விலை ரூ. 27 லட்சத்து 76 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான டிசைன் மற்றும் கூர்மையான ஹெட்லைட் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரமாண்ட பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் மற்றும் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஸ்டான்டர்டு மாடல் மெட்டாலிக் கார்பன் கிரே மற்றும் எபோனி பெயின்ட் நிறங்களில் கிடைக்கிறது.

 

அதிக பிரீமியம் மாடலான Z H2 SE மெட்டாலிக் மேட் கிராஃபீன்ஸ்டீல் கிரே மற்றும் எபோனி நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் ஃபிரேம் மற்றும் என்ஜின் கவர்கள் பச்சை நிறம் கொண்டிருக்கின்றன. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான மெக்கானிக்கல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இவற்றில் 998சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 197.2 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவியை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 320mm டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை 260mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனுக்கு மேனுவல் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சஸ்பென்ஷனும், SE வேரியண்டில் ஷோவா ஸ்கைஹூக் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

இந்திய சந்தையில் புதிய கவசாகி Z H2 சீரிஸ் மாடல்கள் டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் V4 மற்றும் பிஎம்டபிள்யூ S 1000 R மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன. இரு மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News