பைக்

ரூ. 9 லட்சம் விலையில் புது கவாசகி பைக் இந்தியாவில் அறிமுகம் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2024-02-22 06:47 GMT   |   Update On 2024-02-22 06:47 GMT
  • இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • கவாசகி Z900 மாடலில் 948 சி.சி. என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

கவாசகி இந்தியா நிறுவனம் மேம்பட்ட Z900 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கவாசகி Z900 மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 9 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும். இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டுள்ளன.

2024 கவாசகி Z900 மாடல்- மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் மேட் கிராஃபீன் ஸ்டீல் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லைட், மஸ்குலர் ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் சீட்கள், அதிரடியான பாடி வொர்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

 


புதிய கவாசகி Z900 மாடலில் 948 சி.சி. இன்லைன், 4 சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 123.6 ஹெச்.பி. பவர், 98.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் இதன் முன்புறம் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் உள்ளது.

பிரேக்கிங்கிற்கு 300mm இரட்டை முன்புற டிஸ்க்குகள், பின்புறம் 250mm டிஸ்க்குகள் உள்ளன. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 17 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல், பவர் மோட்கள், ரைடிங் மோட்கள், ஏ.பி.எஸ்., எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் 2024 கவாசகி Z900 மாடல் டுகாட்டி மான்ஸ்டர் , பி.எம்.டபிள்யூ. F900R மற்றும் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

Tags:    

Similar News