வேற லெவல் மாற்றங்கள்.. 2024 கே.டி.எம். 125 டியூக் அறிமுகம்..!
- 2024 கே.டி.எம். 125 டியூக் மாடல் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
- ஆரஞ்சு மற்றும் பிளாக் பெயின்ட் இந்த பைக் தோற்றத்தை மேலும் மேம்படுத்தி இருக்கிறது.
கே.டி.எம். 125 டியூக் மோட்டார்சைக்கிள் மிகப்பெரிய அப்டேட் பெற்று இருக்கிறது. அதன்படி 2024 கே.டி.எம். 125 டியூக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2024 கே.டி.எம். 125 டியூக் மாடல் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், சர்வதேச மாடல் தோற்றத்தில் 2024 டியூக் 390 போன்றே காட்சியளிக்கிறது.
இதில் உள்ள ஹெட்லேம்ப் சற்று பிரமான்டமாக காட்சியளிக்கிறது. இதன் ஃபியூவல் டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் கூர்மையாகவும், அதிக மஸ்குலர் தோற்றமும் கொண்டிருக்கின்றன. இதன் பின்புறம் பாடி பேனல்கள் எதுவும் இல்லாமல், ரிவைஸ்டு ஃபிரேம் முழுக்க தெரிகிறது. ஆரஞ்சு மற்றும் பிளாக் பெயின்ட் இந்த பைக் தோற்றத்தை மேலும் மேம்படுத்தி இருக்கிறது.
புதிய 2024 கே.டி.எம். 125 டியூக் மாடலிலும் 124.9 சிசி லிக்விட் கூல்டு என்ஜின் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.7 ஹெச்.பி. பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 2024 கே.டி.எம். 125 டியூக் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.