பைக்

2024 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் அறிமுகம்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2023-11-05 05:00 GMT   |   Update On 2023-11-05 05:00 GMT
  • 2024 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் புதிய நிறங்களில் கிடைக்கிறது.
  • கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் 373 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

கே.டி.எம். நிறுவனம் தனது 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் 2024 வெர்ஷனை அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 2024 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

2024 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் புதிய நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் புதுவித கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி புதிய ஆரஞ்சு மற்றும் பிளாக், வைட் மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கின் டிசைனுக்கு ஏற்ப புதிதாக ஆரஞ்சு கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு நிற வேரியண்ட்களிலும் பிளாக்டு-அவுட் பாகங்கள் உள்ளன.

 

கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் 15 லிட்டர் ஃபியூவல் டேன்க் மற்றும் 373 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள என்ஜின் 43 ஹெச்.பி. பவர் மற்றும் 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் மற்றும் குயிக்ஷிஃப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ். மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட டி.எஃப்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் ஸ்போக் மற்றும் அலாய் என இருவித வீல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனினும், இந்தியாவில் இதுபோன்ற ஆப்ஷன் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Tags:    

Similar News