125சி.சி.-யில் புதிய பைக் உருவாக்கும் பஜாஜ்
- 150-160 சிசி பிரிவில் இடம்பெறாது என்பதை உணர்த்துகிறது.
- ரைடர், எக்ஸ்டிரீம் 125 மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் 125சிசி பிரிவில் கடுமையான போட்டி உருவாகி உள்ளது. டி.வி.எஸ். மற்றும் ஹீரோ நிறுவனங்கள் முறையே ரைடர் மற்றும் எக்ஸ்டிரீம் 125R போன்ற மாடல்களை 125சிசி பிரிவில் விற்பனை செய்து வருகின்றன. இந்த வரிசையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பஜாஜ் பைக்கின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய பைக்கில் சற்றே மெல்லிய டயர்கள், பின்புறம் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதை கொண்டு இந்த பைக் வழக்கமான 150-160 சிசி பிரிவில் இடம்பெறாது என்பதை உணர்த்துகிறது.
இந்த பைக் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் எல்.இ.டி. ஹெட்லைட் வித்தியாசமான வடிவம், தடிமனான டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதன் பின்புறம் சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இருக்கைகள் ஸ்ப்லிட்-சீட் வடிவில் உள்ளன. இவற்றைக் கொண்டு பார்க்கும் போது, இந்த பைக் 125சிசி பிரிவில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அந்த வரிசையில், இந்த பைக் 125 சிசி பிரிவில் டி.வி.எஸ். ரைடர் மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், புதிய பைக் குறித்து பஜாஜ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படலாம்.