பைக்

ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி - டுகாட்டி பைக் வாங்க சூப்பர் சான்ஸ்

Published On 2024-01-13 10:01 GMT   |   Update On 2024-01-13 10:01 GMT
  • எக்ஸ் ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்களுக்கு பலன்கள் வழங்கப்படுகின்றன.
  • சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது.

டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது மல்டிஸ்டிராடா வி4 மற்றும் ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான பலன்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மோட்டார்சைக்கிள்களின் எக்ஸ் ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்களுக்கு பலன்களாக வழங்கப்படுகின்றன.

பயனர்கள் இந்த பணத்தை கொண்டு அக்சஸரீக்களை வாங்கவோ அல்லது டுகாட்டி அதிகாரப்பூர்வ ஆடைகளை வாங்கவோ, சர்வீஸ் பேக்குகளை வாங்கவோ அல்லது ரொக்க தள்ளுபடி பெறவோ முடியும். இந்த சலுகைகள் ஜனவரி 31 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 


டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 மாடலில் 1103 சிசி, வி4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 205.17 ஹெச்.பி. பவர், 123 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் எஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் மின்திறன் மூலம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒலின்ஸ் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் விலை ரூ. 22 லட்சத்து 15 ஆயிரம் என துவங்குகிறது.

 


மல்டிஸ்டிராடா வி4 மாடல் டுகாட்டி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் அட்வென்ச்சர் மாடல் ஆகும். இந்த பைக் ஸ்டான்டர்டு, எஸ் மற்றும் ரேலி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் கிரான்-டூரிஸ்மோ வி4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்.பி. பவர், 125 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

இதன் எஸ் வேரியண்ட் மின்திறன் மூலம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 மற்றும் மல்டிஸ்டிராடா வி4 மாடல்கள் மட்டுமின்றி ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 மற்றும் மல்டிஸ்டிராடா வி2 போன்ற மாடல்களுக்கும் டுகாட்டி இந்தியா சலுகைகளை அறிவித்து இருக்கிறது. 

Tags:    

Similar News