ஹோண்டாவின் 100சிசி பைக் இப்படித் தான் காட்சியளிக்குமா?
- ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புது 100சிசி பைக்கை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
- புது ஹோண்டா 100சிசி பைக் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புது 100சிசி மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது ஹோண்டா பைக் ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலுக்கு போட்டியாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
புது பைக் உருவாகி வருவதை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா சிஇஒ மற்றும் நிர்வாக இயக்குனர் அடுஷி ஒகாடா உறுதிப்படுத்தி இருந்தார். தற்போது ஹோண்டாவின் புது பைக் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ஹோண்டா நிறுவனத்தின் டிசைன் காப்புரிமை விண்ணப்பத்தில் இருந்து புது ஹோண்டா பைக் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
விண்ணப்பத்தின் படி ஹோண்டா இதனை 2020 வாக்கில் விண்ணப்பித்து இருந்தது தெரியவந்துள்ளது. எனினும், இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுவரை இந்த காப்புரிமை ஹோண்டா நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. புது பைக் டிசைன் ஹோண்டா உருவாக்கி வரும் 100சிசி பைக் போன்று இருக்கும் என்றே தெரிகிறது.
இந்த பைக் ஸ்லோபர் என்ஜின் கொண்டிருக்கிறது. இது ஹோண்டா டிரேட்மார்க் செய்த யூனிட் ஆகும். இந்த என்ஜின் ஹோண்டா சூப்பர்கப் C100EX மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்லோபர் என்ஜின் குறைந்த செலவில் உற்பத்தியை செய்து விட முடியும். புது 100சிசி மாடலில் ஸ்லோபர் என்ஜினை வழங்குவதன் மூலம் ஹோண்டா பைக் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.
Photo Courtesy: ZigWheels