குறைந்த விலையில் புதிய டெஸ்டினி 125 மாடல்.. ஹீரோ வேற லெவல்..!
- ஹீரோ டெஸ்டினி 125 மாடலில் அன்டர் சீட் சார்ஜிங் போர்ட், ஆட்டோ ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி உள்ளது.
- புதிய டெஸ்டினி 125 மாடலிலும் 124.6சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்கூட்டர் மாடலின் குறைந்த விலை எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கூட்டர் டெஸ்டினி 125 பிரைம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 71 ஆயிரத்து 499, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது LX மற்றும் VX வேரியன்ட்களை விட முறையே ரூ. 7 ஆயிரத்து 749 மற்றும் ரூ. 14 ஆயிரத்து 239 வரை குறைவு ஆகும்.
புதிய டெஸ்டினி மாடல் பழைய ஸ்கூட்டரை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. எனினும், இதில் பெரிய ஹெட்லேம்ப், பாடி நிறத்தால் ஆன மிரர்கள், ஒற்றை கிராப் ரெயில், சிங்கில் டோன் சீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதே ஸ்கூட்டரின் எக்ஸ்-டெக் வேரியன்டில் உள்ள ப்ளூடூத் கனெக்டிவிட்டி இந்த வேரியன்டில் வழங்கப்படவில்லை.
ஆனாலும், புதிய வேரியன்டில் அன்டர் சீட் சார்ஜிங் போர்ட், அன்டர் சீட் லேம்ப், ஆட்டோ ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம், செமி டிஜிட்டல் கன்சோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஹீரோ டெஸ்டினி 125 பிரைம் மாடலில் 10-இன்ச் ரிம்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் உள்ளன.
இத்துடன் 124.6சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9 ஹெச்.பி. பவர், 10.36 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் CVT ரியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் உள்ள ஃபியூவல் டேன்க் ஐந்து லிட்டர்கள் கொள்ளளவு கொண்டிருக்கிறது.