பைக்

ஒரே மாதத்தில் இத்தனை லட்சமா? விற்பனையில் அசத்திய ஹீரோ மோட்டோகார்ப்

Published On 2022-10-03 11:56 GMT   |   Update On 2022-10-03 11:56 GMT
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் செப்டம்பர் மாதத்திற்கான இருசக்கர வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2022 செப்டம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2022 மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனை 12.4 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஹீரோ மோட்டோகார்ப்ப் நிறுவனம் 5 லட்சத்து 07 ஆயிரத்து 690 மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதுதவிர 12 ஆயிரத்து 290 யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 19 ஆயிரத்து 980 யூனிட்களில் ஹீரோ நிறுவனம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 237 பைக்குகளையும், 39 ஆயிரத்து 743 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து இருக்கிறது.

2021 செப்டம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 ஆயிரத்து 366 யூனிட்கள் குறைவாக விற்பனை செய்துள்ளது. பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அக்டோபர் 7 ஆம் தேதி விடா எனும் புது பிராண்டின் கீழ் ஹீரோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் கழற்றும் வசதி கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஜீரோ உடன் ஹீரோ கூட்டணி அமைத்து இருக்கிறது. இதன் மூலம் இரு நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளன.

Tags:    

Similar News