125சிசி என்ஜின் கொண்ட ஹோன்டா டியோ இந்தியாவில் அறிமுகம்!
- புதிய ஹோன்டா டியோ 125 மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் உள்ளது.
- ஹோன்டா டியோ 125 மாடல் ஒட்டுமொத்தமாக ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது.
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியோ 125 சிசி ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டியோ 125சிசி மாடல் ஸ்டான்டர்டு மற்றும் ஸ்மார்ட் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலின் விலை ரூ. 83 ஆயிரத்து 400 முதல் துவங்குகிறது.
புதிய ஹோன்டா டியோ 125 மாடலில் OBD2 விதிகளுக்கு பொருந்தும் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் eSP வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இதே என்ஜின் ஹோன்டா கிரேசியா 125 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
அந்த மாடலில் இந்த யூனிட் 8.14 ஹெச்பி பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இந்த மாடல் தோற்றத்தில் 110சிசி ஹோன்டா டியோ போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலின் அப்ரனில் ஹெட்லைட், முன்புற இன்டிகேட்டர்கள், கூர்மையான டிசைன், ஸ்ப்லிட் ஸ்டைல் கிராப்ரெயில், டூயல் அவுட்லெட் எக்சாஸ்ட் உள்ளது.
இத்துடன் புதிய கிராஃபிக்ஸ், பிரம்மான்ட லோகோ வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஹோன்டா டியோ 125சிசி ஸ்கூட்டர்- பியல் சைரன் புளூ, பியல் டீப் கிரவுன்ட் கிரே, பியல் நைட் ஸ்டார் பிளாக், மேட் மார்வல் புளூ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் சங்கரியா ரெட் மெட்டாலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய ஹோன்டா டியோ 125சிசி மாடலில் எல்இடி ஹெட்லைட், ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம், சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர் மற்றும் என்ஜின் இன்ஹிபிட்டர், இன்டகிரேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் பீம், பாசிங் ஸ்விட்ச், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் ஸ்மார்ட் கீ வேரியண்டில் H ஸ்மார்ட் தொழில்நுட்பம், ஸ்மார்ட் ஃபைன்ட், கீலெஸ் ஸ்டார்ட் மற்றும் செக்யுரிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. சஸ்பென்ஷனுக்கு- முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சிங்கில் ரியர் ஸ்ப்ரிங் உள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் டிரம் பிரேக்குகள், ஸ்மார்ட் வேரியண்டில் பெட்டல் ரக முன்புற டிஸ்க் பிரேக் உள்ளது.