ஹீரோ கரிஷ்மா மாடலின் புதிய எடிசன்: 100 பைக்குகள் மட்டுமே... ஏலத்தில் விற்பனை
- இந்த பைக் சென்டென்னியல் கலெக்டர்ஸ் எடிசன் மோட்டார்சைக்கிள் என அழைக்கப்படுகிறது.
- ஏலம் விடுவதன் வாயிலாக இந்த பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைச் செய்ய திட்டமிட்டிருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் பிரபல பைக் மாடலான கரிஷ்மா (Karizma XMR) மோட்டார்சைக்கிளின் புதிய எடிசனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிறுவனத்தை உருவாக்கிய பிரிஜ்மோகன் லால் முஞ்சலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் 101 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த மாடல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஹீரோ நிறுவனம் இந்த பைக்கை சென்டென்னியல் கலெக்டர்ஸ் எடிசன் மோட்டார்சைக்கிள் (Centennial Collector's Edition Motorcycle) என குறிப்பிட்டு இருக்கின்றது. சுருக்கமாக மோட்டார்சைக்கிள் 'சிஇ001' (CE001) எனும் பெயரில் இது அழைக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பதிப்பை அது வெறும் 100 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைக்கு தயார் செய்திருக்கின்றது.
ஏலம் விடுவதன் வாயிலாக இந்த பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைச் செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதற்கான ஏல பணிகளே தற்போது தொடங்கி இருப்பதாகவும் இந்த பைக்கை சிறப்பு நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக ஏலம் விடப்படும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் (Karizma XMR) உடன் ஒப்பிடுகையில், சென்டென்னியல் கலெக்டர்ஸ் எடிசன் மோட்டார்சைக்கிள் 5 கிலோ எடை குறைவாக 158 கிலோவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.