நீண்ட ரேன்ஜ் கொண்ட புது ஸ்கூட்டர் அறிமுகம் செய்த ஒலா எலெக்ட்ரிக்
- மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
- 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி பெறலாம்.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 X ஸ்கூட்டரின் குறைந்த விலை எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய வெர்ஷனில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒலா S1 X வெர்ஷனின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 190 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி 30 நிமிடங்கள் வரை ஆகும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
அதிக திறன் கொண்ட பேட்டரி காரணமாக இந்த வேரியண்ட் ஸ்டான்டர்டு S1 X-ஐ விட 4 கிலோ அதிக எடை கொண்டிருக்கிறது. இவை தவிர மற்ற அம்சங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை.
புதிய வேரியண்ட் உடன் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒலா S1 சீரிசின் ஒட்டுமொத்த வேரியண்ட்களுக்கும் வாடிக்கையாளர்கள் வாரண்டியை நீட்டிக்க முடியும். இதற்கு வாடிக்கையாளர்கள் ரூ. 5 ஆயிரம் செலுத்தி 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி பெறலாம்.
ஒலா S1 X 4 கிலோவாட் ஹவர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் ஏப்ரல் மாதம் துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் ரெட் வெலோசிட்டி. மிட்நைட், வோக், ஸ்டெல்லார், ஃபன்க், போர்சிலைன் வைட் மற்றும் லிக்விட் சில்வர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.