இணையத்தில் வெளியான சுசுகி இ பர்க்மேன் விவரங்கள்
- சுசுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்கூட்டர் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- தோற்றத்தில் இ பர்க்மேன் மாடல் அதன் பெட்ரோல் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம்- பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடலை நீண்ட காலமாக சோதனை செய்து வருகிறது. தற்போது சுசுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இ பர்க்மேன் மாடல் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய இ பர்க்மேன் மாடல் தோற்றத்தில் அதன் பெட்ரோல் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
மேக்சி ஸ்டைல் பாடிவொர்க் கொண்ட முன்புறத்தில் பிரமாண்ட பக்கவாட்டு பேனல்கள் உள்ளன. ஹார்டுவேரை பொருத்தவரை முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், முன்புறம் டிஸ்க் பிரேக் செட்டப் உள்ளது. இந்த மாடலில் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி வழங்கப்படுவதால் டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்படலாம்.
சுசுகி இ பர்க்மேன் மாடலில் 4.0 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் கழற்றி மாற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இது 44 கிலோமீட்டர் ரேஞ்ச், மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய எலெக்ட்ரிக் வாகனத்திற்கென சார்ஜிங் மையங்களை அமைக்க ஹோண்டா நிறுவனம் கச்சோ உடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இ பர்க்மேன் மாடல் மொத்தத்தில் 147 கிலோ எடை கொண்டிருக்கும் என்றும் இதன் உயரம் 780mm வரை இருக்கும் என்றும் தெரிகிறது.