null
அட இப்படியும் செய்யலாமா? என்ட்ரி லெவல் பிரிவில் புதிய 800சிசி மாடல் உருவாக்கும் சுசுகி..!
- சுசுகி நிறுவனம் குறைந்த விலை அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- 2023 EICMA நிகழ்வில் புதிய மோட்டார்சைக்கிள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
சுசுகி நிறுவனம் அட்வென்ச்சர் பிரிவை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சுசுகி நிறுவனம் புதிய என்ட்ரி லெவல் V ஸ்டார்ம் 800 மாடலை என்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இணையத்தில் லீக் ஆகி இருக்கும் தகவல்களில் சுசுகி நிறுவனம் 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்வதற்காக மூன்று மாடல்களை பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு மாடல்கள் V ஸ்டார்ம் 800DE அட்வென்ச்சர் மற்றும் V ஸ்டார்ம் 800DE மாடல்களின் 2024 வெர்ஷன் ஆகும். இந்த இரு மாடல்களும் 2022 EICMA ஆட்டோ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது லீக் ஆகி இருக்கும் தகவல்களின் படி சுசுகி நிறுவனம் குறைந்த விலை மாடல் ஒன்றை இந்த பிரிவில் அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி புதிய மாடல் V ஸ்டார்ம் 800 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம். இதில் சிறிய முன்புற வீல், அலாய் வீல்கள், வித்தியாசமான சஸ்பென்ஷன் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிகிறது.
புதிய குறைந்த விலை மோட்டார்சைக்கிள் 2023 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. சுசுகி நிறுவனம் தனது V ஸ்டார்ம் 800DE மாடலை இந்திய சந்தையில் டெஸ்டிங் செய்வதால், அது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.