எலெக்ட்ரிக் 2 வீலர்கள்.. எதிர்கால திட்டம் இதுதான் - சுசுகி
- ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம்.
- 25 சதவீதம் எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்கும்.
உலகம் முழுக்க எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வரிசையில், சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன திட்டம் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளது.
2030 நிதியாண்டிற்குள் கிட்டத்தட்ட எட்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக சுசுகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதில் எந்தெந்த மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது.
2030 ஆண்டு வாக்கில் சுசுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்களில் 25 சதவீதம் எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்கும் என்றும் 75 சதவீதம் மாடல்கள் ஐ.சி. என்ஜின் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை வைத்தே சுசுகியின் முதற்கட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.