பைக்
விரைவில் வெளியாகும் 2024 டிவிஎஸ் அபாச்சி RR 310
- அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்படுகிறது.
- புது மோட்டார்சைக்கிள் சிறு மாற்றங்களுடன் வெளியாகும் என்று தெரிகிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அப்டேட் செய்கிறது. புதுப்பிக்கப்பட்ட அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிள் அடுத்த வாரம் (செப்டம்பர் 16) இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
2018 ஆம் ஆண்டு முதல் இந்த மோட்டார்சைக்கிள் பெருமளவு அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. இதுதவிர டிவிஎஸ் நிறுவனத்தின் ஃபேர்டு மோட்டார்சைக்கிள் மாடல் சமீபத்தில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. புது மோட்டார்சைக்கிள் பெருமளவு மாற்றங்கள் இன்றி வெளியாகும் என்று தெரிகிறது.
தற்போதைய அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிள் ரூ. 2 லட்சத்து 72 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புது மாடல் சிறு அப்டேட்களுடன் விற்பனைக்கு வரும் போது அதன் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.