கார்

2024 டாடா பன்ச் மாடல் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2024-09-18 13:16 GMT   |   Update On 2024-09-18 13:16 GMT
  • புதிய டாடா பன்ச் மாடல் பத்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • இந்த கார் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் எஞ்சின் கொண்டிருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2024 பன்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2024 டாடா பன்ச் விலை ரூ. 6.12 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் சிட்ரோயன் நிறுவனத்தின் சி3, ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

புதிய பன்ச் மாடலின் சென்டர் கன்சோலில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட், 10.25 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வெண்ட்கள், முன்புறம் ஆர்ம்-ரெஸ்ட் வழங்கப்படுகிறது.

 


2024 டாடா பன்ச் மாடல் பத்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் அதன் முந்தைய வெர்ஷன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிறங்களிலேயே கிடைக்கிறது. இந்த காரிலும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.

இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதே கார் சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கிறது. பவர்டிரெயினை பொருத்தவரையில் இந்த கார் மொத்தம் ஏழு வெர்ஷன்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News