கார்

பிஎம்டபிள்யூ 5 சீரிஸின் முன்பதிவு தொடக்கம்

Published On 2024-06-22 03:47 GMT   |   Update On 2024-06-22 03:47 GMT
  • பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலானது, லாங் வீல்பேஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது.
  • 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என இருவிதமாக இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஜெர்மனியை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று பிஎம்டபிள்யூ (BMW). பல்வேறு நாடுகளில் கார்களை விற்பனை செய்யும் BMW நிறுவனத்துக்கு முக்கியமான மார்க்கெட்டாக இந்தியா திகழ்கிறது. இதனாலேயே இங்கு அவ்வப்போது புதுப்புது கார்களை அறிமுகப்படுத்துகிறது BMW நிறுவனம்.

அந்த வகையில், தற்போது BMW நிறுவனத்தின் 8-வது தலைமுறை 5 சீரிஸ் லாங்க் வீல்பேஸ் (BMW 5 Series Long Wheelbase) மாடலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வருகிற 24-ந்தேதி தான் இந்த மாடலை அறிமுகம் படுத்தப்படுகிறது. இதற்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள BMW டீலர்கள் அல்லது ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்.


பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலானது, லாங் வீல்பேஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது. 5 சீரிஸ் காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் முன்பு இருந்ததை காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காருக்குள் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என இருவிதமாக இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News