விலை ரூ. 2.50 கோடி தான்.. இரு புதிய கார்களை அறிமுகம் செய்த பி.எம்.டபிள்யூ.
- பி.எம்.டபிள்யூ. 740d M ஸ்போர்ட் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
- பி.எம்.டபிள்யூ. 740d M ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் உள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஆடம்பர கார் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல்கள் M70 எக்ஸ் டிரைவ் மற்றும் 7 சீரிஸ் 740d M ஸ்போர்ட் என்று அழைக்கப்படுகின்றன.
இதில் பி.எம்.டபிள்யூ. i7 M70 எக்ஸ்டிரைவ் மாடலில் முழுமையாக இலுமினேட் செய்யப்பட்ட முன்புற கிரில், செங்குத்தான ஸ்லாட்கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் டி.ஆர்.எல்.கள், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், மெல்லிய எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டூயல் டோன் பெயின்ட் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
இந்த காரில் டூயல்-மோட்டார் செட்டப் உள்ளது. இவற்றுடன் 101.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள மோட்டார்கள் ஒருங்கிணைந்து 657 ஹெச்.பி. வரையிலான பவர், 1100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. i7 M70 எக்ஸ் டிரைவ் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 740d M ஸ்போர்ட் மாடல் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. 740d M ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 286 ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
பி.எம்.டபிள்யூ. i7 M70 எக்ஸ் டிரைவ் ரூ. 2 கோடியே 50 லட்சம்
பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் 740d M ஸ்போர்ட் ரூ. 1 கோடியே 81 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.