கார்

ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் C3 ஏர்கிராஸ் அறிமுகம் செய்த சிட்ரோயன்

Published On 2024-01-29 13:52 GMT   |   Update On 2024-01-29 13:52 GMT
  • இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் ஆட்டோமேடிக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் ஆட்டோமேடிக் மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த கார் மேக்ஸ் மற்றும் பிளஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

 


மேனுவல் ஆப்ஷனில் இந்த என்ஜின் 109 ஹெச்.பி. பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியன்ட் 109 ஹெச்.பி. பவர், 205 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ரிமோட் என்ஜின் ஸ்டார்ட், ரிமோட் ஏ.சி. பிரீ-கன்டிஷனிங், 10-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, 7 இன்ச் டி.எஃப்.டி. கிளஸ்டர், யு.எஸ்.பி. சார்ஜர், ஏ.சி. வென்ட்கள் வழங்கப்படுகின்றன.

Tags:    

Similar News