கார்

இந்தியாவில் அறிமுகமான சிட்ரோயன் C3 ஏர்கிராஸ்

Published On 2023-04-27 11:08 GMT   |   Update On 2023-04-27 11:08 GMT
  • சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடல் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது.
  • மூன்றாம் அடுக்கு இருக்கைகளை இடவசதி தேவைப்படும் போது கழற்றி வைத்துக் கொள்ளலாம்.

சிட்ரோயன் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எஸ்யுவி C3 ஏர்கிராஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கார் மூன்று அடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கிறது. இந்த கார் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

C3 ஏர்கிராஸ் மாடல் C3 ஹேச்பேக் மாடலை விட நீளமாக இருக்கிறது. இந்த காரின் நீளம் 4.3 மீட்டர்கள் ஆகும். தோற்றத்தில் இந்த காரின் முகம் ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப்கள், கவர்ச்சிகரமான மோனோடோன் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

 

இந்த காரின் முன்புற கிரில் 2 ஸ்லாட் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் பம்ப்பர் பாடி நிறத்தால் ஆன பாகங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பிளாக் கிலாடிங் உள்ளது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள், சில்வர் ஃபாக்ஸ் பிளேட்கள் வழங்கப்படுகின்றன. பக்கவாட்டில் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.

டெயில்கேட் பகுதியில் C3 ஏர்கிராஸ் பேட்ஜ் மற்றும் ரியர் பம்ப்பரின் கீழ்புறத்தில் சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள் உள்ளன. C3 ஏர்கிராஸ் மாடலின் மிகமுக்கிய அம்சம் மூன்றாம் அடுக்கு இருக்கைகள் ஆகும். இவற்றை அதிக இடவசதி தேவைப்படும் போது கழற்றி வைத்துக் கொள்ளலாம். சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடல் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது.

இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட், மேனுவல் ஏசி, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 109 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிது. 

Tags:    

Similar News