கார்

ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டுவரும் 2024 சிட்ரோயன் C3 - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2024-08-29 06:39 GMT   |   Update On 2024-08-29 06:39 GMT
  • இந்த வேரியண்டில் தற்போது டூயல் டோன் வெர்ஷன்கள் எதுவும் இடம்பெறவில்லை.
  • டாப் எண்ட் வேரியண்டில் மட்டும் தான் தற்போது டூயல் டோன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

சிட்ரோயன் சமீபத்தில் இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட C3 ஹேட்ச்பேக்கை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது, இதன் விலை ரூ.6.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). அதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் விரைவில் கிடைக்கும். அதே வேளையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பசால்ட் மாடலில் இருந்து இந்த கார் சில அம்சங்களைப் பெற இருக்கிறது.

மடிக்கக்கூடிய மேற்கூரை கைப்பிடிகள்

இது அடிப்படை அம்சமாக இருந்தாலும், C3 மாடலில் இது வழங்கப்படவில்லை. தற்போது இந்த மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகிறது. முன்புற மற்றும் பின்புற பயணிகள் இதனை பயன்படுத்தலாம். காரின் ரியர் விண்டோ ஸ்விட்ச்கள் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் வேரியண்டில் முன்புறம் பவர் விண்டோக்கள் வழங்கப்படுகின்றன.

மிட் ரேஞ்ச் மாடல்களில் மாற்றங்கள்

மிட் ரேஞ்ச் வேரியண்டில் தற்போது இசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான ஆங்கரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள் உள்ளன. இந்த வெர்ஷனில் டெசரா ஃபுல்-வீல் கவர் மற்றும் அனோடைஸ் செய்யப்பட்ட கிரே நிற இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் உள்ளது. இந்த வேரியண்டில் தற்போது டூயல் டோன் வெர்ஷன்கள் எதுவும் இடம்பெறவில்லை.



டாப் எண்ட் மாடல்களின் அம்சங்கள்

டாப் எண்ட் வேரியண்டில் மட்டும் தான் தற்போது டூயல் டோன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் போலார் வைட், செஸ்டி ஆரஞ்சு, பிளாட்டினம் கிரே மற்றும் காஸ்மோ புளூ உள்ளிட்டவைகளில் ஒன்றே தேர்வு செய்து கொள்ளலாம். இத்துடன் எஞ்சின் ஸ்டார்ட் / ஸ்டாப், இஎஸ்பி, ஹில்-ஹோல்டு கண்ட்ரோல், டிபிஎம்எஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

இவைதவிர ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு விங் மிரர்கள், சைடு டர்ன் இன்டிகேட்டர்கள், எல்இடி விஷன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஆறு ஏர்பேக், ஏழு இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

கனெக்டிவிட்டி ஆப்

சிட்ரோயன் நிறுவனம் முற்றிலும் மேம்பட்ட மை சிட்ரோயன் கனெக்ட் ஆப்-ஐ அறிமுகம் செய்துள்ளது. டாப் எண்ட் மாடலை வாங்குவோருக்கு இதில் உள்ள 40 ஸ்மார்ட் அம்சங்களும் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News