கார்

செப்டம்பர் வெளியீடு... லிட்டருக்கு இவ்வளவு மைலேஜ் கொடுக்குமா? அசத்தும் ஹோன்டா எலிவேட்!

Published On 2023-07-26 09:57 GMT   |   Update On 2023-07-26 09:57 GMT
  • ஹோன்டா எலிவேட் எஸ்யுவி மாடல் ஹோன்டா சிட்டி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
  • ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் ஹோன்டா எலிவேட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹோன்டா நிறுவனத்தின் எலிவேட் எஸ்யுவி மாடல் ஜூன் 6-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்திய சந்தையில் எலிவேட் மாடல் ஹோன்டா நிறுவனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகும். புதிய ஹோன்டா எலிவேட் மாடல் இந்தியாவில் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வெளியீட்டை தொடர்ந்து ஹோன்டா எலிவேட் இந்திய வினியோகமும் துவங்கிவிடும் என்று தெரிகிறது. இந்த காரின் வெளியீட்டுக்கு முன், அதன் மைலேஜ் பற்றிய விவரங்களை ஹோன்டா அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் ARAI சான்றின் படி ஹோன்டா எலிவேட் லிட்டருக்கு எவ்வளவு கிலிோமீட்டர்கள் செல்லும் என்று தெரியவந்துள்ளது.

 

ஹோன்டா எலிவேட் மாடல் ஹோன்டா சிட்டி காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் எஸ்யுவி மாடல் ஆகும். இதன் டிசைன் மற்றும் என்ஜினியரிங் பணிகள் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 119 ஹெச்பி பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மேனுவல் வேரியன்ட் லிட்டருக்கு 15.31 கிலோமீட்டர்களும், ஆட்டோமேடிக் வேரியன்ட் லிட்டருக்கு 16.92 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது. ஹோன்டா சிட்டி போன்று, இந்த காரில் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படவில்லை.

அம்சங்களை பொருத்தவரை ஹோன்டா எலிவேட் மாடலில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொன்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், குரூயிஸ் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது.

இத்துடன் ஸ்டீரிங்கில் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஹோன்டா சென்சிங் ADAS சூட் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய ஹோன்டா எலிவேட் மாடல் ஹூன்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

Tags:    

Similar News