கார்

இந்தியாவில் அறிமுகமானது ஜீப் காம்பஸ் கிளப் எடிஷன்

Published On 2023-02-09 13:19 GMT   |   Update On 2023-02-09 13:19 GMT
  • ஜீப் நிறுவனத்தின் புதிய கிளப் எடிஷன் கார் அதன் பேஸ் வேரியண்டை விட குறைந்த விலை கொண்டிருக்கிறது.
  • கிளப் எடிஷன் காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஜீப் இந்தியா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் எஸ்யுவி காம்பஸ் மாடலின் புதிய கிளப் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் மெரிடியன் காரின் கிளப் எடிஷனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு எஸ்யுவி மாடல்களும் அதன் எண்ட்ரி லெவல் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

இவை குறைந்த எண்ணிக்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. ஜீப் காம்பஸ் கிளப் எடிஷன் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது காம்பஸ் ஸ்போர்ட் டீசல் மேனுவல் வேரியண்டை விட ரூ. 10 ஆயிரம் விலை குறைவு ஆகும். எனினும், இதன் என்ஜின் அம்சங்கள் மற்றும் டியூனிங்கில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

காஸ்மடிக் மாற்றங்களை பொருத்தவரை டூயல் டோன் ரூஃப், பொனெட்டில் புதிய கிராஃபிக், டெயில்கேட்டில் "Club Edition" பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஜீப் காம்பஸ் கிளப் எடிஷன் மாடலிலும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ரிஃப்லெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 8.4 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, பார்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் உள்ளது. இத்துடன் ஸ்போர்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்டில் உள்ள அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News