கார்

மெரிடியன் மாடலின் சில வேரியண்ட்களை திடீரென நிறுத்திய ஜீப் இந்தியா

Published On 2023-07-18 05:53 GMT   |   Update On 2023-07-18 05:53 GMT
  • ஜீப் மெரிடியன் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • ஜீப் இந்தியா நிறுவனம், ஒரு மாத காலத்திற்கு மழைகால சிறப்பு வாகன சரிவீஸ் திட்டத்தை அறிவித்தது.

ஜீப் இந்தியா நிறுவனம் தனது மெரிடியன் 7 சீட்டர் எஸ்யுவி மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களை நிறுத்தி இருக்கிறது. ஜீப் மெரிடியன் எஸ்யுவி-இன் லிமிடெட் வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்கள் நிறுத்தப்பட்டன.

இந்திய சந்தையில் ஜீப் மெரிடியன் லிமிடெட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 30 லட்சத்து 10 ஆயிரம், ரூ. 32 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஜீப் மெரிடியன் மாடல் - லிமிடெட் (O), X, அப்லேன்ட் மற்றும் லிமிடெட் பிளஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

 

ஜீப் மெரிடியன் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு 4x4 சிஸ்டம் வழங்கப்படுகிறது.

சமீபத்தில் தான் ஜீப் இந்தியா நிறுவனம் ஒரு மாத காலத்திற்கு மழைகால சிறப்பு வாகன சரிவீஸ் திட்டத்தை அறிவித்து இருந்தது. இதில் வாகன பரிசோதனை, இலவச அலைன்மென்ட், டயர் மாற்றும் சேவை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News